< முன் பகுதி

/*! elementor – v3.16.0 – 13-09-2023 */
.elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block}


அடுத்த பாடம் >

/*! elementor – v3.16.0 – 13-09-2023 */
.elementor-heading-title{padding:0;margin:0;line-height:1}.elementor-widget-heading .elementor-heading-title[class*=elementor-size-]>a{color:inherit;font-size:inherit;line-height:inherit}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-small{font-size:15px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-medium{font-size:19px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-large{font-size:29px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xl{font-size:39px}.elementor-widget-heading .elementor-heading-title.elementor-size-xxl{font-size:59px}

பாவம்

2 இராஜாக்கள் 17:6-28

பாடம் 24 – கண்ணீர்



Download PDF

/*! elementor – v3.16.0 – 13-09-2023 */
.elementor-widget-tabs.elementor-tabs-view-vertical .elementor-tabs-wrapper{width:25%;flex-shrink:0}.elementor-widget-tabs.elementor-tabs-view-vertical .elementor-tab-desktop-title.elementor-active{border-right-style:none}.elementor-widget-tabs.elementor-tabs-view-vertical .elementor-tab-desktop-title.elementor-active:after,.elementor-widget-tabs.elementor-tabs-view-vertical .elementor-tab-desktop-title.elementor-active:before{height:999em;width:0;right:0;border-right-style:solid}.elementor-widget-tabs.elementor-tabs-view-vertical .elementor-tab-desktop-title.elementor-active:before{top:0;transform:translateY(-100%)}.elementor-widget-tabs.elementor-tabs-view-vertical .elementor-tab-desktop-title.elementor-active:after{top:100%}.elementor-widget-tabs.elementor-tabs-view-horizontal .elementor-tab-desktop-title{display:table-cell}.elementor-widget-tabs.elementor-tabs-view-horizontal .elementor-tab-desktop-title.elementor-active{border-bottom-style:none}.elementor-widget-tabs.elementor-tabs-view-horizontal .elementor-tab-desktop-title.elementor-active:after,.elementor-widget-tabs.elementor-tabs-view-horizontal .elementor-tab-desktop-title.elementor-active:before{bottom:0;height:0;width:999em;border-bottom-style:solid}.elementor-widget-tabs.elementor-tabs-view-horizontal .elementor-tab-desktop-title.elementor-active:before{right:100%}.elementor-widget-tabs.elementor-tabs-view-horizontal .elementor-tab-desktop-title.elementor-active:after{left:100%}.elementor-widget-tabs .elementor-tab-content,.elementor-widget-tabs .elementor-tab-title,.elementor-widget-tabs .elementor-tab-title:after,.elementor-widget-tabs .elementor-tab-title:before,.elementor-widget-tabs .elementor-tabs-content-wrapper{border:1px #d5d8dc}.elementor-widget-tabs .elementor-tabs{text-align:left}.elementor-widget-tabs .elementor-tabs-wrapper{overflow:hidden}.elementor-widget-tabs .elementor-tab-title{cursor:pointer;outline:var(–focus-outline,none)}.elementor-widget-tabs .elementor-tab-desktop-title{position:relative;padding:20px 25px;font-weight:700;line-height:1;border:solid transparent}.elementor-widget-tabs .elementor-tab-desktop-title.elementor-active{border-color:#d5d8dc}.elementor-widget-tabs .elementor-tab-desktop-title.elementor-active:after,.elementor-widget-tabs .elementor-tab-desktop-title.elementor-active:before{display:block;content:””;position:absolute}.elementor-widget-tabs .elementor-tab-desktop-title:focus-visible{border:1px solid #000}.elementor-widget-tabs .elementor-tab-mobile-title{padding:10px;cursor:pointer}.elementor-widget-tabs .elementor-tab-content{padding:20px;display:none}@media (max-width:767px){.elementor-tabs .elementor-tab-content,.elementor-tabs .elementor-tab-title{border-style:solid solid none}.elementor-tabs .elementor-tabs-wrapper{display:none}.elementor-tabs .elementor-tabs-content-wrapper{border-bottom-style:solid}.elementor-tabs .elementor-tab-content{padding:10px}}@media (min-width:768px){.elementor-widget-tabs.elementor-tabs-view-vertical .elementor-tabs{display:flex}.elementor-widget-tabs.elementor-tabs-view-vertical .elementor-tabs-wrapper{flex-direction:column}.elementor-widget-tabs.elementor-tabs-view-vertical .elementor-tabs-content-wrapper{flex-grow:1;border-style:solid solid solid none}.elementor-widget-tabs.elementor-tabs-view-horizontal .elementor-tab-content{border-style:none solid solid}.elementor-widget-tabs.elementor-tabs-alignment-center .elementor-tabs-wrapper,.elementor-widget-tabs.elementor-tabs-alignment-end .elementor-tabs-wrapper,.elementor-widget-tabs.elementor-tabs-alignment-stretch .elementor-tabs-wrapper{display:flex}.elementor-widget-tabs.elementor-tabs-alignment-center .elementor-tabs-wrapper{justify-content:center}.elementor-widget-tabs.elementor-tabs-alignment-end .elementor-tabs-wrapper{justify-content:flex-end}.elementor-widget-tabs.elementor-tabs-alignment-stretch.elementor-tabs-view-horizontal .elementor-tab-title{width:100%}.elementor-widget-tabs.elementor-tabs-alignment-stretch.elementor-tabs-view-vertical .elementor-tab-title{height:100%}.elementor-tabs .elementor-tab-mobile-title{display:none}}
வேதவசனம்
பாடம்
கேள்விகள்
வேதவசனம்

புலம்பல் 3 : 1-24

1. ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.

2. அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.

3. அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்.

4. என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.

5. அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.

6. பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.

7. நான் புறப்படக்கூடாதபடி என்னைச் சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார்.

8. நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.

9. வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.

10. அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.

11. என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பாழாக்கிவிட்டார்.

12. தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

13. தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.

14. நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.

15. கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.

16. அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார்.

17. என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.

18. என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.

19. எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.

20. என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.

21. இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன்.

22. நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.

23. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.

24. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.

பாடம்

புலம்பல் எனப்படுவது, சொல்லமுடியாத வேதனை அல்லது இழப்பைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு நபரிடமிருந்து, தேவனை நோக்கி எழும்புகிற, நீண்டதும், உரத்த சத்தமானதுமான ஒரு கூக்குரல் ஆகும். யோபின் புத்தகத்திலும், சங்கீதங்களிலும் நீங்கள் புலம்பல்களைப் பார்க்கிறீர்கள். மேலும் வேதாகமத்தில், 'புலம்பல்' எனப்படுகிற ஒரு முழுப்புத்தகத்தையுமே தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். அது, எருசலேமின் அழிவினால் விளைந்த, ஆழ்ந்த துன்பத்தையும், வேதனையையும், சொல்ல முடியாத துயர வர்ணனைகளுடன் விவரிக்கிறது. புலம்பல் என்பது, நொறுங்கிய இருதயத்தின் ஓலம். அது, துயரப்படுகிற யாவருக்கும் தேவன் அருளிய ஈவு ஆகும். 

சாம்பல்களிலிருந்து இன்னும்கூடப் புகை எழுந்துகொண்டிருந்தது. ஒரு காலத்தில் மிகச்சிறந்த நகரமாயிருந்த எருசலேமின் இடிபாடுகளுக்கிடையில், தன் பாதையைக் கண்டுபிடித்து நடந்துகொண்டிருந்த எரேமியா கண்ட காட்சி, அவர் இருதயத்தை உடைத்தது. ஒரு காலத்தில், தேவனுடைய ஆசீர்வாதக் கரத்தின்கீழ்ச் செழித்தோங்கியிருந்த அந்த நகரம், தற்போது பேய்கள் உலவும் பட்டணம்போலக் காட்சியளித்தது. “ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (புலம்பல் 1:1) என்று அவர் புலம்பினார்.

கலக்கம் மிகுந்த இந்தத் தருணத்தில், தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கும், கட்டாயமான பணி எரேமியாவுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவரது ஊழியம், சமயம் மற்றும் சன்மார்க்க ரீதியான சீர்திருத்தங்களைத் தீவிரமாகச் செயல்படுத்திய, இளம் ராஜாவாகிய யோசியாவின் ஆட்சிக்காலத்தில் தொடங்கியது. ஆனால், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம், மிகவும் மாறுபாடான பாதையைத் தெரிந்துகொண்டான். தேவனுடைய வார்த்தை, தனக்கு வாசித்துக்காட்டப்படவேண்டுமென்று அவன் கேட்டான். ஆனால் அதன் பின்பு, வேதத்தின் சுருள்களைக் கத்தியால் அறுத்து, அவற்றை நெருப்பில் எறிந்துவிட்டான். வேதாகமத்தை எரித்துப்போட்ட இந்த ராஜாவின் ஆட்சிக் காலத்தில்தான், தமது ஜனங்களின் மீதான தேவனின் நியாயத்தீர்ப்புத் தொடங்கியது.

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், எருசலேமை முற்றிக்கைபோட்டான். அதன் ஜனங்கள், தங்கள் பட்டணத்தைக் காப்பதற்குப் பெரிதும் பெலனற்றுப்போனபோது, அவனது சேனை, மிகவும் திறமைசாலிகளான நபர்களைச் சுற்றிவளைத்து, அவர்களைப் பாபிலோனுக்கு நாடுகடத்தியது. அவர்களில், தானியேல் என்றழைக்கப்பட்ட வாலிபரும் ஒருவர் (அவரது கதைக்கு நாம் பிறகு வருவோம்). தேவனுடைய ஜனங்கள், அடுத்தடுத்து ஐந்துவித அழிவுகளைச் சந்தித்தார்கள்: பகைவர் பட்டணத்தை முற்றிக்கை போட்டார்கள் (எரேமியா 52:5), ஜனங்கள் பட்டினியால் வாடினார்கள் (புலம்பல் 1:11), பட்டணம் வீழ்ந்தது (1:7), பின்பு, அது ஆக்கிரமிக்கப்பட்டது (1:5), மற்றும் தேவாலயம் அழிக்கப்பட்டது (4:1).

உயிர் பிழைத்தவர்கள், தங்கள் வீடுகளை இழந்தார்கள். மேலும் அநேகர், பிள்ளைகளையும்கூட இழந்தார்கள். முற்றிக்கையின்போது, மிகவும் இளம் வயதினர் முதலில் பசியினால் மரித்திருக்கவேண்டும். பட்டணம் வீழ்ச்சியடைந்தபோது, வளர்ந்து, பெரியவர்களான பிள்ளைகளைக்கொண்ட பெற்றோர், தங்கள் மகன்களும், மகள்களும் நாடுகடத்தப்பட நடத்திக்கொண்டுபோகப்படுவதைக் கண்டு, இனி ஒருபோதும் தாங்கள், தங்கள் பிள்ளைகளைக் காணப்போவதேயில்லை என்பதை அறிந்து, கொடிய வேதனையை அனுபவித்தார்கள்: “அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்” (1:5). அவர்களின் துயரம், மிகவும் கொடியதாய் இருந்திருக்கவேண்டும்.

நாம் நேசிக்கும் ஒன்றின் அல்லது ஒருவரின் இழப்பு, சீர்ப்படுத்த முடியாத பெரும் துயரத்தை உண்டாக்கும். அந்தத் துயரத்தைக் கடப்பது என்பது, மிகவும் வேதனை நிறைந்த ஒரு கட்டமாகும். அது ஒருவேளை, உங்களுக்கு மாபெரும் திருப்தியைக் கொடுத்திருக்கக்கூடிய ஒரு பொறுப்பு அல்லது ஒரு பதவியின் இழப்பாக இருக்கக்கூடும். உங்களுக்கு மாபெரும் சந்தோஷத்தை அளித்திருக்கக்கூடிய ஒன்றைப் பின்பற்றிச் செல்ல, நீங்கள் கொண்டிருந்த சரீர ஆற்றல் மற்றும் மன உற்சாகம் ஆகியவற்றின் இழப்பாக அது இருக்கலாம். அல்லது, ‘இவர் இல்லாவிட்டால் வாழ்க்கை, ஒருபோதும் வாழ்க்கையாகவே இருக்காது’ என்னுமளவுக்கு, உயிராய் நேசிக்கப்படும் ஒரு நபரின் இழப்பாக இருக்கலாம்.

கண்ணீரில் ஊறியது

புலம்பல் ஆகமம், கண்ணீரில் ஊறவைக்கப்பட்ட ஒரு புத்தகம்: “இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், … அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது” (1:2); “என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது் … தேற்றுகிறவர் என்னைவிட்டுத் தூரமானார்” (1:16); “… கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது … குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்” (2:11). இப்படியே, கண்ணீர்க் குறிப்புக்கள் இப்புத்தகம் முழுவதும் தொடர்ந்து காணப்படுகின்றன.

ஆத்துமாவின் வேதனையால், உடலில் ஏற்படும் நடுக்கத்தின் வெளிப்பாடே கண்ணீராகும். அவை, தேவனிடமிருந்து வரும் ஒரு ஈவு. ஏனெனில் அவை, உங்களது வேதனைக்கு வடிகாலைத் திறந்துவிடுவதைப்போல் செயல்படுகின்றன. கண்ணீர் சிந்தி அழுவதென்றால் என்னவென்று உணர்ந்திருக்கின்ற, ஓர் இரட்சகரைத் தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். ஆகவே, அணைபோட்டுத் தடுத்து நிறுத்தாமல், உங்கள் கண்ணீரை வழிந்தோடவிடுங்கள்.

புலம்பலானது, துயரத்துக்கு வார்த்தை வடிவம் கொடுக்கிறது. அத்துடன் அது, துயரப்படுகிறவர்கள் தங்களது இழப்பின் ஒவ்வொரு விவரத்தையும் எவ்வாறு கொட்டித் தீர்க்கிறார்கள், என்பதற்கு மாதிரியாகவும் இருக்கிறது. உங்கள் துயரத்தின் இருண்ட மூலை, முடுக்குகளின்மேல் தேவனுடைய குணமாக்கும் பிரசன்னத்தை வீசச்செய்வதன் மூலம், அந்தத் துயரத்தை நீங்கள் எதிர்கொள்ளவேண்டும். உங்களை நேசிக்கிறவர்களின் உதவியைக்கொண்டு அதைச்செய்தால், உங்களுக்கு அது ஆறுதலைத் தருவதாய் இருக்கும்.

தேவனுடைய கரம்

புலம்பல்களின் புத்தகத்தில், துயருற்ற மக்கள், தேவன் ஏக சக்கராதிபதியாய் இருக்கிறார் என்று விசுவாசித்தார்கள். அவர்கள் துன்பப்பட்டபோது, “இதற்கும், தேவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று அவர்கள் சொல்லவில்லை. ஆனால், “அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்” (புலம்பல் 3:32), என்றே அவர்கள் சொன்னார்கள்.

தேவன் அனைத்தின் மீதும் ஆளுகை செய்கிறார் என்று விசுவாசிப்பது, நம்மால் பதில் சொல்ல முடியாத கடினமான கேள்விகளை எழுப்புகிறது. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, சிலுவையின் மீது பாடுபட்டபோது அவர், “ஏன் … ?” (மத்தேயு 27:46), என்று கூப்பிட்டுக் கதறினார். ஆனால், பரலோகம் அவருக்கும்கூட மௌனமாகவே இருந்தது. ஆகவே, வேதனை தோய்ந்த, “ஏன்?” எனும் கேள்வி உங்கள் ஆத்துமாவிலிருந்து எழும்போது, இயேசுவும் அதே இடத்தில் இருந்தார் என்பதையும், அவரும், எந்த ஒரு பதில் வராத நிலையிலும், பிதாவை விசுவாசித்திருக்கவேண்டிய நிலையிலிருந்தார் என்பதையும், நினைவுகூருங்கள்.

ஆகையால், தேவனிடத்தில் உங்களுக்கு இருக்கும் மனக்குறையைக் குறித்து, நீங்கள் செய்யவேண்டியது என்ன?

புலம்பல் 3-ல், கர்த்தருக்கு எதிராகப் பத்தொன்பது குறைபாடுகள் அல்லது முறையீடுகள் உள்ளன. கர்த்தரைக் குறிப்பிட்டுக் கூறும், ‘அவர்’ என்கிற வார்த்தை, மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்: “அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்” (புலம்பல் 3:2); “அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார்” (3:3); “அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்” (3:5). “அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்” (3:10). அது வெறும், “தேவன் இவற்றை அனுமதித்தார்,” என்பது மட்டுமல்ல் மாறாக, “தேவனே அவற்றைச் செய்தார்! அவர்தாமே அவற்றை நேரிடப்பண்ணினார்!” என்பதாகும்.

தேவனிடத்தில் ஏற்படுகிற மனக்குறை என்பது, அவிசுவாசத்தின் ஒரு வெளிப்பாடு அல்ல. மாறாக, உண்மையான விசுவாசத்தின் ஒரு வெளிப்பாடாக இருக்கக்கூடும். புலம்பல் புத்தகத்தில் தேவனுக்கெதிராக, அநேகப் புகார்களை எழுப்பிய ஜனங்கள், அவர்கள் சந்தித்த துயரம், ஏதோ தற்செயலாய் நிகழ்ந்ததென்று நம்பவில்லை. தங்களுக்கு நேரிட்ட பேரழிவையும் சேர்த்து, அனைத்திற்குமே தேவன் ஏக சக்கராதிபதியாய் இருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் அப்படி நம்பிய காரணத்தினாலேயே, தேவனிடத்தில் மனக்குறைகொண்டவர்களாய்ப் போராடினார்கள்.

உங்கள் வாழ்விலும் ஏதோ ஓரிடத்தில், நீங்கள் இதே போராட்டத்தைச் சந்திக்கலாம். மாபெரும் இருளில் இருப்பதாக நீங்கள் உணரலாம். நீங்கள் சிக்குண்டவராகவும், ஒடுக்கப்படுபவராகவும், பயப்படுகிறவராகவும், சோர்வுற்றவராகவும் உணரலாம். அத்துடன், தேவனே உங்களுக்கு விரோதமாகத் திரும்பிவிட்டார் என்பதாகவும் உங்களுக்குத் தோன்றலாம்.

புலம்பலின் புத்தகம், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதற்கான மாதிரியை வழங்குகிறது. உங்கள் மனக்குறையை, நீங்கள் அவரிடம் கொண்டுவரவேண்டும் என்று, தேவன் விரும்புகிறார். ஒரு நண்பர் அல்லது ஒரு போதகர், இந்தக் காரியத்தில் உங்களுக்கு உதவ முடியும். ஆனால், நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பற்றிய உண்மையைத் தேவனிடம் கூறவேண்டும் என்பதுதான் அதில் மிக முக்கியமான விஷயம். தேவனைப் பற்றி, அவருடைய முதுகுக்குப் பின்னால் குறை கூறாதீர்கள்! உங்கள் குறைகளை அவரிடத்தில் முகமுகமாகக் கூறுங்கள். உங்களது குறைகளைக் கொட்டித் தீர்ப்பதற்குத் தேவ சமூகத்தைவிடச் சிறந்த இடம் வேறு இல்லை.

இன்றைக்கான நம்பிக்கை

துயரங்களைப் பற்றிய ஒரு புத்தகத்தில், பரலோகத்தைக் குறித்து மிகப்பெரிய அளவில் விவரிக்கப்பட்டிருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கக்கூடும். ஆனால், புலம்பல் ஆகமத்தில், பரலோகத்தைப் பற்றி மிகச்சிறிதளவே காணப்படுகிறது. ஏன்? தேவனின் இறுதி நோக்கம் நிறைவேறுதல் மிகவும் அற்புதமானது. ஆனால், துயரப்படுகிற ஒரு நபருக்கு, அவர் சந்திக்கும் மிக வேதனையான நிலையிலிருந்து மீள்வதுதான் நோக்கமாக இருக்கும். மாறாக, பரலோகத்தைப் பற்றிய சிந்தனை தூரமாகிவிடும். நீங்கள் துயரப்படும்போது, “இன்றைக்கு இதை நான் எப்படிக் கடந்து செல்லப்போகிறேன்?” என்பதுதான் உங்களது முதல் கேள்வியாக இருக்கும். அந்தக் கேள்விக்கான பதில், பரலோகம் அல்ல் மாறாக, தேவனுடைய இரக்கமே ஆகும்.

“இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன். நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்” (புலம்பல் 3:21-24).

நீங்கள் இன்றைய நாளைக் கடந்து செல்வதற்குத் தேவனுடைய இரக்கம் உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மேலும், நாளைக்கு நீங்கள் விழித்தெழும்போது, அவரது அன்பும், இரக்கமும் உங்களுக்காகக் காத்திருக்கும். எந்த நேரத்திலும், நீங்கள் சுமக்கும் பாரத்திற்குத் தேவையான, தகுந்த பெலத்தைக் கிறிஸ்து உங்களுக்குத் தருவார்.

தேவன் உண்மையாகவே என் பக்கம் இருக்கிறாரா?

துயரப்படுகிற ஒரு நபரின் மனதில் அடிக்கடி எழுகின்ற ஒரு கேள்வி எதுவெனில், “என் வாழ்வில் தேவன் இப்படியொரு வேதனையைக் கொண்டுவந்துவிட்டபின்பு, அவர் என் பக்கம்தான் இருக்கிறார் என்று நான் எப்படி நம்ப முடியும்?” என்பதுதான்.

இந்தக் கேள்விக்கான பதிலானது, “புருஷன் நான்,” என்கிற வார்த்தைகளில் இருக்கிறது. இவர், புலம்பல் ஆகமம் 3:1-ல் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்: “ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான்.” யார் இந்தப் புருஷன்?
புலம்பல் ஆகமத்தில் வரும் “புருஷன்”, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தெளிவாக வெளிக்காட்டுகின்றார்.

அந்தப் புருஷன், “என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்் சுகத்தை மறந்தேன்” (3:17), என்று சொன்னார். கெத்செமனே தோட்டத்தில் இயேசு, “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” (மாற்கு 14:34), என்று சொன்னார்.

அந்தப் புருஷன், “நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்” (புலம்பல் 3:14), என்று சொன்னார். இயேசுவைப் பற்றியோ, “அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி(னார்கள்)” (மத்தேயு 27:29), என்று நாம் வாசிக்கிறோம்.

அந்தப் புருஷன், “அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்” (புலம்பல் 3:2), என்று சொன்னார். இயேசு சிலுவையிலே தொங்கியபோதும், புூமி முழுவதையும் அந்தகாரம் மூடிக்கொண்டது (மத்தேயு 27:45).

அந்தப் புருஷன், “நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்” (புலம்பல் 3:8), என்று சொன்னார். சிலுவையிலே இயேசுவும், “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார் (மத்தேயு 27:46).

இயேசுவின் சிரசில் முள்முடி தரிக்கப்பட்டு, பொந்தியு பிலாத்து அவரை ஜனக்கூட்டத்திற்கு முன்பாகக் காட்சிப்படுத்தி, “இதோ, இந்த மனுஷன்!” என்று சொன்னபோது, அது எத்தனை அசாதாரணமான ஒன்றாக இருந்திருக்கவேண்டும்! (யோவான் 19:5). இதைச் சொன்னதன் மூலம் அவர், புலம்பல் 3:1-ஐ நிறைவேற்றினார் என்பதைக் குறித்து அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

புலம்பல் ஆகமத்தில் முன்னுரைக்கப்படுபவர் இயேசுவே. தேவகுமாரன், துயரப்படுகிற மனிதனானார். மேலும் அவர், “பாடு அநுபவித்தவருமாயிருந்தார்” (ஏசாயா 53:3). இயேசு பாடுகளை அநுபவித்தவரானதால், நமது துன்ப வேளைகளில், நமக்கு அவரால் உதவ முடிகிறது.

துயரப்படுகிற ஓர் உலகத்துக்குத் துயரப்படுகிற ஓர் இரட்சகர் தேவைப்படுகிறார். ஆனால், அந்த இரட்சகர், துயரங்களை மேற்கொண்ட ஒருவராயும் இருப்பது நமக்குத் தேவையாயிருக்கிறது. துயரமே, இயேசுவின் முடிவாய் இருக்கவில்லை. அவர் அதைக் கடந்து வந்து, அவரது உயிர்த்தெழுதலின் மூலம் அதன் மீது வெற்றிசிறந்தார். இந்த இரட்சகர், தம்மையே உங்களுக்கு வழங்குகிறார்: “சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங்கீதம் 30:5). ஆம், ஒரு நாள், தேவன் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.

நீங்கள் பாடுகள் மற்றும் இழப்புகளின் பள்ளத்தாக்கின் வழியே கடந்து செல்லும்போது, கிறிஸ்துவைக் கண்டடையக்கூடிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். பாடுகளின் பாதையில் நடப்பதென்றால் என்னவென்று இரட்சகர் அறிந்திருக்கிறார். அவருக்குத் துயரமும் நன்கு பழக்கமான ஒன்றுதான். நீங்கள் நடந்து செல்லத் தெரிந்துகொள்ளவே மாட்டீர்கள் என்பதான எந்த ஒரு பாதையாய் இருப்பினும், இயேசுவுடன் நெருங்கி வருகிற பாதையாய் இருக்குமானால், அது ஆசீர்வதிக்கப்படும். 

கேள்விகள்

1. நீங்கள் இழந்த ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றியும், அது உங்களுக்கு எப்படிப்பட்டதாயிருந்தது என்பதையும் விவரியுங்கள்.

2. முறையான விதத்தில் துயரப்படுவது எப்படிப்பட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

3. துயரத்தை வெளிப்படுத்துவதில், புலம்பல்களின் புத்தகம் அமைத்துத் தரும் மாதிரிகளின் வழியில், உங்களுக்கு மிகவும் உதவிகரமாகத் தோன்றுவது எது?

4. தேவனிடத்தில் நீங்கள் ஏதேனும் மனக்குறையை உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் எனில், அதை நீங்கள் எப்படிக் கையாண்டீர்கள்?

5. தேவன் உங்களுக்காக இருக்கிறார் அல்லது உங்களுக்கு எதிராக இருக்கிறார் என்பதை நீங்கள் எவ்வாறு அறிய முடியும்?

/*! elementor – v3.16.0 – 13-09-2023 */
.elementor-column .elementor-spacer-inner{height:var(–spacer-size)}.e-con{–container-widget-width:100%}.e-con-inner>.elementor-widget-spacer,.e-con>.elementor-widget-spacer{width:var(–container-widget-width,var(–spacer-size));–align-self:var(–container-widget-align-self,initial);–flex-shrink:0}.e-con-inner>.elementor-widget-spacer>.elementor-widget-container,.e-con>.elementor-widget-spacer>.elementor-widget-container{height:100%;width:100%}.e-con-inner>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer,.e-con>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer{height:100%}.e-con-inner>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer>.elementor-spacer-inner,.e-con>.elementor-widget-spacer>.elementor-widget-container>.elementor-spacer>.elementor-spacer-inner{height:var(–container-widget-height,var(–spacer-size))}.e-con-inner>.elementor-widget-spacer.elementor-widget-empty,.e-con>.elementor-widget-spacer.elementor-widget-empty{position:relative;min-height:22px;min-width:22px}.e-con-inner>.elementor-widget-spacer.elementor-widget-empty .elementor-widget-empty-icon,.e-con>.elementor-widget-spacer.elementor-widget-empty .elementor-widget-empty-icon{position:absolute;top:0;bottom:0;left:0;right:0;margin:auto;padding:0;width:22px;height:22px}